விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள்! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

உளுந்தூர்பேட்டை அருகே மதுவிலக்கை அமல்படுத்த கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் மகளிர் மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் இண்டி கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக திமுகவை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் இந்த மதுவிலக்கு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த மதுவிலக்கு மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், 

மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்,

அரசமைப்பு சட்டம் 47 இல் கூறியபடி மதுவிலக்குக்கான சட்டத்தை இயற்ற வேண்டும்,

மதுவிலக்கு அமல்படுத்தும் மாநில அரசுக்கு சிறப்பு நிதி, ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி வழங்க வேண்டும், 

மதுவால் மனித வளம் பாதிக்கப்படுவதால் விசாரணை ஆணையம் கொண்டு வர வேண்டும், 

மதுவிலக்கு கொண்டு வருவதால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி அளிக்க வேண்டும். 

மதுக்கடைகளை மூட கால அட்டவணை நிர்ணயித்து முழு மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், 

போதை பொருளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Mathu vilakku Maanadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->