நான் விஜயை விமர்சிக்கவில்லை! மாறி மாறி பேசி குழப்பும் திருமாவளவன்& வன்னி அரசு! - Seithipunal
Seithipunal


அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்வதாக இருந்ததும், பின்னர் அது திமுக கூட்டணி அழுத்தத்தால் அவர் பின்வாங்கியதாகவும் பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று திருமாவளவன்ம், விஜயின் கட்சியையும் அவரின் கொள்கையும் மறைமுகமாக விமர்சித்து ஒரு 10 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த திருமாவளவன், "த.வெ.க தலைவர் விஜய் உடன் எந்த சிக்கலும் எங்களுக்கு இல்லை. விஜய்க்கும் எங்களுக்கும் இதுவரை கருத்து முரண் ஏற்பட்டதில்லை.

விஜய் பங்கேற்கும் நிகழ்வில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்று சொல்லவில்லை. த.வெ.க தலைவர் விஜயை நாங்கள் விமர்சிக்கவில்லை" என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆனால், நேற்றைய தினம் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவிக்கையில், அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என திருமாலவன் கூறவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவும் இல்லாமல் அரசியலமைப்பு சட்டத்தை ஒரு கையிலும், பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்து, சமரச பாயாசம் கிண்டுகிற ஒருவரோடு மேடையை பகிர்ந்து கொள்ள முடியாது என்று தான் திருமாளவன் கூறியதாக வன்னி அரசு தெரிவித்திருந்தார். 

மேலும், நூலை வெளியிடுகின்ற வெளியீட்டாளர்கள் திருமாவளவனை புறக்கணித்துவிட்டு பாயாசம் தான் வேண்டும் என்று போய் இருப்பதாகவும் வன்னி அரசு குற்றம் சாட்டியிருந்தார். 

ஒரு கையில் அரசியலமைப்பு சட்டத்தையும், மற்றொரு கையில் பகவத் கீதையை வைத்திருப்பதாக வன்னியரசு கூறுவது தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயைத் தான் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். 

திருமாவளவன் அறிக்கையில் ஒரு மாதிரியும், பெட்டியில் ஒரு மாதிரியும், அவரின் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஒரு மாதிரியும் மாற்றி மாற்றி அறிக்கை வெளியிட்டு மக்களை குழப்பி, தாங்களும் குழம்பிக் கொள்வதுடன், இருக்கும் கூட்டணியையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், திருமவளவனன் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்துக் கொண்டு, கூட்டணி காய் நகர்த்திக் கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Thirumavalavan Vanni Arasu TVK Vijay DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->