எனக்கு தெரியாது, அட்மின் போட்டு இருப்பாரு - சர்ச்சைக்கு பதிலளிக்க முடியாமல் தவித்த திருமாவளவன்!  - Seithipunal
Seithipunal


கடந்த 1999 ஆம் ஆண்டு நெய்வேலியில்  "கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மனிதனுக்கும் அதிகாரம்" என்ற பெயரில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக ஒரு  கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன், ஆட்சியிலும் பங்கு, கூட்டணியிலும் பங்கு என்று பேசி இருந்தார். 

இதனை குறிப்பிட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தில் திருமாவளவன் பேசிய காணொளியை இன்று காலை திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

 

பின்னர் அதனை டெலிட் செய்துவிட்டு, அதே காணொளியை "அதிகாரத்தில், அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று, முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் வலியுறுத்தியது" என்று, புதிய பதிவு ஒன்றை பதிவிட்டார்.

பின்னர் அத்தனையும் காலை 11 மணியளவில் திருமாவளவன் டெலிட் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுரையில் இன்று பகல் செய்தியாளர்களை சந்தித்த திருமவளவனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு திருமாவளவன், "எனக்கு தெரியாது, வீடியோவை அட்மின் பதிவிட்டிருப்பார், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது நாங்க ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்க கருத்துதான்" என்று தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகள் எதற்கும் நின்று நிதானமாக சொல்லத்தக்க திருமாவளவன், சற்று பதற்றத்துடனேயே பதிலளித்து சென்றார்.

இதற்க்கு காரணம் தரப்போது வெளியாகியுள்ளது. ஆம், இன்று மதுரை, புதூர் பகுதியில் கட்சி தொடங்கியபோது முதன் முதலில் கொடியேற்றிய அதே கம்பத்தில் இன்று கொடியேற்று இருந்தாராம் திருமாவளவன்.

ஆனால், ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பத்தை காவல்துறை அகற்றியுள்ளது. இதன் காரணமாகவே திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க அல்லது பதிலடி கொடுக்கும் விதமாக அந்த காணொளி வெளியிடப்பட்டு இருக்கலாம் என்று அரசியியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK vs DMK Thirumavalavan X Post Issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->