திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம்.! அதிரவைத்த இஸ்லாமியரின் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


விசிக தலைவர் திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டத்தை அறிவிப்போம் என்று, பாஜகவின்  தேசிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர், வேலுார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோயமுத்தூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வேலுார் இப்ராஹிம் தெரிவித்தாவது, "வரும் நகராட்சி தேர்தலில், திமுகவின் இந்த ஊழல் ஆட்சிக்கு எதிரான பிரசாரத்தைபாஜக முன்னெடுத்து செல்லும்.

பாஜக மீது தமிழக மக்கள் மீது நல்ல மதிப்பையும், மரியாதையும் வைத்துள்ளனர். வரும் தேர்தலில், மக்கள் ஆதரவோட பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது .

பிரதமர் மோடி இந்தியாவில் மத நல் வளர்க்கும் லிணக்கத்தை வளர்க்கும் விதமாக ஆட்சி நடந்து கோட்னு இருக்கிறது. அனைத்து மதங்களின் வழிபாட்டையும் மதிக்க கூடிய கட்சியாக பாஜக உள்ளது. அதனால் , இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பலர் பாஜகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். 

தமிழகத்தில், இந்துக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையே மதக் கலவரத்தை மூட்டும் வகையில், திருமாவளவன் திட்டமிட்டு தொடர்ந்து பேசி வருகிறார். திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர்  பிரதமரையும், பாஜக தலைவர்களையும் மரியாதை குறைவாக பேசு வருகின்றனர்.

பிரதமர் மோடியை இனி திருமாவளவன் இழிவாக பேசினால், அவருக்கு சேலை கட்டும் போராட்டத்தை அறிவிப்போம்" என்று வேலுார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VELLORE IBRAHIM WARN TIO THIRUMA AND DMK VCK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->