துணை குடியரசு தலைவர் தேர்தல் முடிவு : மாபெரும் வெற்றியை பெற்ற பாஜக வேட்பாளர் ஜெகதீப் தன்கர்.!
Vice president Election result
நாட்டின் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம், வரும் 10-ந் தேதி முடிகிறது.
இதனையடுத்து, அடுத்த துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (6-ந் தேதி)நடந்தது.
இந்த தேர்தலில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 788 பேர் வாக்களிக்கும் வகையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க. வேட்பாளராக மேற்கு வங்காள மாநிலத்தின் முன்னாள் கவர்னர் ஜெகதீப் தன்கர் நிறுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் பதிவான 725 வாக்குகளில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜ.க. வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்று அபார வெற்றியை பெற்றுள்ளார்.
English Summary
Vice president Election result