விஜய் பா.ஜ.க.விற்கு துணை போகிறார்! - முத்தரசன் தாக்கு! - Seithipunal
Seithipunal


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பயணித்த திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த கலை(35), வழக்கறிஞர் சீனிவாசன் சென்னை, பாரிமுனை செம்பு சாஸ்த் தெருவை சேர்ந்த வசந்த குமார், ரியாஸ் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். நால்வருக்கும் மாநில செயற்குழு சார்பில் இரங்கலையும் இவர்களின் பிரிவால் துயருற்றுள்ள பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைந்திட விழைகின்றோம்.

புதிதாக அரசியல் கட்சியை தொடங்குபவர்கள் அனைவரும், தாங்கள் தொடங்கியுள்ள கட்சி நாட்டு நலனுக்கும், மக்கள் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடும் என்று தெரிவிப்பார்கள். அதன் தொடர்ச்சியாக மக்கள் நலன் சார்ந்த இயக்கங்களை ஜனநாயக முறையில் மேற்கொள்வார்கள். அரசியல் பாதை என்பது உலகில் இரண்டு பாதைகளைக் கொண்டது. ஒன்று இடதுசாரிப் பாதை, மற்றொன்று வலதுசாரிப் பாதையாகும்.

பிளவுவாத சக்திகளை எதிர்ப்பதாக கூறுகின்றார். அடுத்த கணம் தி.மு.க.வை குறிவைத்து சம்மட்டியினை கொண்டு அடிக்கின்றார்.

தி.மு.க.வை மட்டுமல்ல, தி.மு.க.வுடன் தோழமை கொண்ட கட்சிகளையும் மறைமுகமாக தனது தாக்குதலை நடத்தியுள்ளார். பா.ஜ.க. பாசிசம் எனில் நீங்கள் என்ன பாயாசமா எனக் கூறியது பாசிச அபாயத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பாசிச பா.ஜ.க.வின் இந்துத்துவா மாடலை எதிர்த்து, தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்திய தேர்தல் வெற்றிகளை கொச்சைப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் விஜய், பாசிச பா.ஜ.க.விற்கு துணை போகின்றாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
தாங்களே அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து முதல்-அமைச்சர் ஆவேன் என நாற்காலி ஆசையை வெளிப்படுத்தியவர், எங்களோடு சேர வந்தால் சேர்த்துக் கொள்வோம், அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்போம் என்று கூறியிருப்பது அதிகாரத்தில் பங்கு என்ற தேன்தடவும் வேலையாகும்.

இத்தகைய நயவஞ்சக நரித்தனத்திற்கு தமிழக மக்கள் ஒரு போதும் இறையாக மாட்டார்கள் என்பதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay is going to support bjp attack on mutharasan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->