விஜய் மக்கள் இயக்கத்தினர் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.! - Seithipunal
Seithipunal



நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கட்டாயமாக வெற்றி பெறுவார்கள் என அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளரிடம் பேசிய இவர் விஜய் மக்கள் இயக்கத்தினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்டாயமாக வெற்றி பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின், விஜய் மக்கள் இயக்கம் கட்சி யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Makkal Iyakkm confirm victory in urban local election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->