#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, வருகின்ற பிப்ரவரி மாதம் 19 மாதம் தேதி ஒரேகட்டமாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தேர்தலுக்கான மனுத்தாக்கல் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி தொடக்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியும், பிப்ரவரி 7ஆம் வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகளை பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார். மேலும், விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி தரப்பட்டுள்ளது. விஜய் படம், மக்கள் இயக்க கொடியைப் தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸு ஆனந்த் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் போட்டியிடும் தொகுதி, வேட்பாளர்கள் குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Makkal Iyakkm discuss about urban local election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->