திமுகவிடம் சிக்கித் தவிக்கும் விஜய்?...போட்டுடைத்த அதிமுக பிரமுகர்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதில் பல்வேறு இழுபறி நீடித்து வந்த நிலையில், தவெக முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேசினார். அப்போது, திமுக.வில் மு.க.ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் எங்கள் அண்ணா என்றும், அவருக்கு பின்பு இன்பநிதி தான் எங்கள் அண்ணா என துரைமுருகன் பேசுவது ஏற்புடையதல்ல என்று சாடினார்.

மேலும் மத்திய பாஜக அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அதிமுக ஆதரிப்பதாக தெரிவித்த அவர்,  திமுக ஆட்சியை வெளியேற்றுவதற்கான பணிகளை செய்தால்தான் நடிகர் விஜய் கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay stuck with DMK The AIADMK leader


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->