தேர்தல் வெற்றிக்கு பள்ளி மாணவர்களை குறி வைத்த விஜய்!..இதோ வெளியான அதிர்ச்சி உரையாடல்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் 27-ம் தேதி  நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் மாவட்ட நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உரையாடியது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல் நாம் சந்திக்கும் முதல் தேர்தல் என்றும், இந்த தேர்தலை சவாலாக எடுத்துக்கொண்டு, நாம் தீர்மானித்த இடத்திற்கு வர இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், வாக்காளர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை நீக்க வேண்டும், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்கள், புதிதாக குடிவந்தவர்கள் என அனைத்து தரப்பினரின் பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவுங்கள் என்று விஜய் கூறியுள்ளதற்கு, சமீபத்திய ஆண்டுகளில் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கிய நிலையில், அவர்களின் வாக்கினை குறிவைத்து பேசி உள்ளதாக சமூக வலைத்தங்களில் பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay targeted school students to win the election here is the shocking conversation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->