விருதுநகரில் வெல்வாரா விஜயபிரபாகரன்? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தொடர் ஓட்டம்போல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து விட்டது. இந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. 

இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2-ந் தேதி முடிவடைந்ததால், அந்த 2 மாநிலங்களுக்கும் 2-ந் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.

 

இந்த நிலையில் நாடு முழுவதும் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விவரம் பற்றி உடனடியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியான தேமுதிக-வின் வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், பாஜகவின் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijaya prabakaran leading viruthunagar constituency


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->