இது மிகப்பெரிய வெற்றி! மகிழ்ச்சியில் விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வரவேற்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிவிப்பில், "பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவை தேமுதிக வரவேற்கிறது. 

இந்த மசோதாவை கொண்டு வர கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்திருப்பது ஓட்டு மொத்த பெண் இனத்திற்கு கிடைத்த வெற்றி. 

மேலும் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். 

பெண்கள் நாட்டின் கண்கள். இது பெண் இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayakan warm wish woman reservation bill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->