அண்ணன் வெற்றி பெற்றால் 'அப்பா ஆத்மா' சாந்தியடையும் - விஜயகாந்த் மகன் உருக்கம்.!
Vijayakanth son Virudhunagar campaign
விருதுநகர் தொகுதியில் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஓட்டு கேட்டு அவரது சகோதரர் நடிகர் சண்முக பாண்டியன் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் பேசியிருப்பதாவது, இது எனது முதல் பிரசாரம். என்னுடைய அண்ணனுக்காக நான் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
எனது அப்பாவை வெற்றி பெற வைக்கவில்லை என யாரும் வருத்தப்பட வேண்டாம். அதற்காக அவரது சாயலில் உள்ள எனது அண்ணன் விஜயபாஸ்கரனை வெற்றி பெற வைத்தாலே எனது அப்பா ஆத்மா சாந்தி அடையும்.
இந்த பகுதியில் என்ன பிரச்சனை இருக்கிறதோ அதனை அண்ணா தீர்த்து வைப்பார். உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து தேர்தலில் நிற்கும் விஜய பிரபாகரனை வெற்றி பெற வைக்க முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
Vijayakanth son Virudhunagar campaign