நடிகர் விக்ரமுக்கு என்ன ஆனது... மருத்துமனை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கை.!
Vikram HEALTH REPORT
நடிகர் விக்ரம் மாரடைப்பு (தகவல்) காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளியான முதல் கட்ட தகவல் படி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரின் மகன் விடுத்துள்ள செய்தியில், "அப்பாவுக்கு மாரடைப்பு இல்லை. வதந்திகளை பரப்பாதீங்க, நம்பாதீங்க. இந்த மாதிரி நேரத்துல எங்க குடும்பத்துக்கு Privacy முக்கியம். அப்பா நல்லா இருக்காரு. இன்னும் ஒரு நாள்ல Discharge ஆயிடுவாரு" என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மருத்துவமனை தரப்பில் வெளியான அறிக்கையில், "அவருக்கு லேசான நெஞ்சு வலி மட்டும் தான். மாரடைப்பு இல்லை. மருத்துவ ரீதியாக அவர் நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார்" என்று அறிவித்துள்ளது.