சொந்த ஊரில் அனுமதிக்கப்படாத அமைச்சர் பொன்முடி! வீட்டின் பூட்டை உடைத்து நுழைந்த அவலம்! உள்ளே வீடியோ! - Seithipunal
Seithipunal


உயர்கல்வி அமைச்சர் பொன்முடியின், சொந்த ஊரில் கல்லூரி மாணவன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் அருண். இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

அருணுக்கும், அதே ஊரை சார்ந்த இருசக்கர வாகனங்கள் திருடுவது, கஞ்சா விற்பனை செய்வது,கஞ்சா போதையில் மிதப்பது என திரியும் சரத் (20 ) கீர்த்தி (17 ) சத்தியன் (16) ஆகியோருக்கும் சண்டை வந்துள்ளது. 

மூவரும் சேர்ந்து அருணின் இருசக்கர வாகனத்தை திருடி உள்ளனர். மூவர் இடையேயான இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பான வாக்குமூலத்தை வீடியோவாக அருண் செல்போனில் பதிவு செய்துள்ளார். தன்னுடைய வாகனத்தை தரவில்லை என்றால், காவல் நிலையத்தில் கொடுத்து விடுவேன் எனவும் சொல்லி உள்ளார்.

இதனால் கோபமடைந்த சரத், கீர்த்தி, சத்தியன் ஆகிய மூன்று பேரும் அருணை, உனது இரு சக்கர வாகனம் தருவதாக கூறி அழைத்துச் சென்று, அடித்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். பின்னர், அருணின் உடலை பனப்பாக்கம் ஏரியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். 

இதனையடுத்து, கஞ்சா போதையில் மிதந்த மூன்று பேரில் சத்தியன், கிராமத்திற்குள் வந்து அருணை கொலை செய்ததை உளறியுள்ளான். பதறிப்போன கிராம மக்கள், மூன்று பேரையும் பிடித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இறந்த கல்லூரி மாணவன் உடலை கிணற்றிலிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற டி. எடையார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொந்த கிராமம்  என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தகவலறிந்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் வீட்டிற்கு அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது பொதுமக்கள் ஊருக்குள் வரக்கூடாதென கூறி எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வீட்டின் வாசலில் அரைமணி நேரம் போராடியும் அஞ்சலி செலுத்த விடாததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீட்டின் பூட்டை உடைத்த பிறகு, வீட்டிற்குள் சென்று அஞ்சலி செலுத்தினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

villagers opposite Minister ponmudi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->