நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.. விழுப்புரம் நகராட்சியை கைப்பற்றிய திமுக..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதுவரை திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

விழுப்புரம் நகராட்சியை கைப்பற்றுகிறது திமுக. விழுப்புரம் நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளில் - திமுக 26, அதிமுக 7, பாமக 2, மனிதநேய மக்கள் கட்சி 1, விசிக 1, காங்கிரஸ் 2, சுயேட்சை 3 ஆகிய வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் - திமுக 19, அதிமுக 8, பாஜக 1 மற்றும் சுயேச்சை 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 7 இடங்களில் திமுக கூட்டணியும், 6 இடங்களில் சுயேட்சையும், 2 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் 37 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக 21, அதிமுக 6, காங்கிரஸ் 4, மதிமுக மற்றும் சிபிஎம் தலா 2, பாஜக மற்றும் விசிக தலா 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

villupuram municipality dmk win


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->