அந்த மூதாட்டி யார்? அதிகார வெறி! கைது செய்ய முயல்வது முட்டாள்தனம்! கொந்தளிக்கும் ஜெயக்குமார்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்ப்பில், "விருகம்பாக்கத்தில் மூதாட்டி ஒருவர் போஸ்டர் மீது செருப்பு வீசியதை வீடியோ எடுத்த பிரதீஸ் என்ற இளைஞரை கன்னியாகுமரி வரை சென்று காவல்துறை கைது செய்துள்ளது.

அந்த மூதாட்டி யார்? என விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்த திமுக அரசு, தனது சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டுகிறது என்பதற்கு இதுவே சாட்சி!

எந்த மக்கள் வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தார்களோ,
அந்த மக்களிடமே தன் அதிகார வெறியை தீர்ப்பதா?

மூதாட்டியின் கோபத்திற்கு பின்னால் ஏதோ ஒரு கோரிக்கை உள்ளது.
அதை கேட்க மறுத்து கைது செய்ய முயல்வது முட்டாள்தனம்! #SadistStalinGovt" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virukampakkam Old lady viral video ADMK DMK Jayakumar MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->