விருதுநகர் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.! முதல்வர் ஸ்டாலினுக்கு 15 வயது சிறுவன் பரபரப்பு கடிதம்.! - Seithipunal
Seithipunal


விருதுநகரை சேர்ந்த 22 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஹரிகரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த 15 வயது சிறுவன் ஒருவன், முதலமைச்சர், உள்துறை செயலாளர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், போலீஸ் சூப்பிரண்டு, மதுரை சரக டி.ஐ.ஜி., தென்மண்டல ஐ.ஜி., ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி, தலைவர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட சட்ட உதவி மையம் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், "நான் வசிக்கும் தெருவில் குடியிருக்கும் ஹரிகரன் மூலம் அந்த இளம்பெண் பழக்கம் ஆனார். எங்கள் 4 பேரையும் (பள்ளி மாணவர்கள்) அந்த பெண் வெவ்வேறு நாட்களில் வீடு மற்றும் மருந்து கிடங்கிக்கு வர சொல்லி, ஆபாச படங்களை காட்டினார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 5 மாதங்கள் தொடர்ந்து அவர் எங்களை தவறான வழிக்கு அழைத்து சென்றார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தும், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே தவறாக வழிநடத்திய அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பெண்ணின் செல்போனை ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும்" என்று அந்த கடிதத்தில் 15 வயது சிறுவன் தெரிவித்துள்ளான்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viruthunagar abuse case school student letter to cm stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->