கன்னியாகுமரியில் 13 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது.. வாக்குப்பதிவு தாமதம்.!
Voting machine repaired at 13 places in Kanyakumari Polling delayed
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைக்கோடு, மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட 13 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் மின்னணு இயந்திரங்கள் கோளாரால் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடலூர் மாநகராட்சி 5-வது வார்டில் மின்னணு வாக்கு இயந்திரம் பழுதானதால் அரை மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. மேலும், திருப்பூர் மாநகராட்சியில் 42-வது வார்டிலுள்ள வாக்குச்சாவடி எண் 406-ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், இடைக்கோடு, தக்கலை உள்ளிட்ட 13 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது.
English Summary
Voting machine repaired at 13 places in Kanyakumari Polling delayed