நாளை வாக்கெடுப்பு....22 கவுன்சிலர்கள் ஜூட்! திக்.. திக். திக்... தப்புமா காஞ்சிபுரம் மேயரின் பதவி! - Seithipunal
Seithipunal


நாளை   காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், மாநகராட்சியின் 22 கவுன்சிலர்கள் சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த மாதம் கோவை மற்றும் நெல்லை மாநகராட்சி மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில்,  காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக  திமுக உறுப்பினர்களே நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தவுள்ளது கட்சிக்குள் சலசலப்பை  ஏற்படுத்தியுள்ளது. 

மொத்தம் 51 வார்டுகள் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில், திமுகவை சேர்ந்த  32 கவுன்சிலர்கள் வெற்றிபெற்றனர். இதனையடுத்து  மகாலட்சுமி யுவராஜ்  ஒருமனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுரு இருந்து வருகிறார். மகாலட்சுமிக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி புகார் அளித்து வந்த நிலையில், சொந்த கட்சியினரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு  தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது மேயர் மகாலட்சுமிக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து,  மேயர் மகாலட்சுமி   பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி 33 கவுன்சிலர்கள், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனிடம் நம்பிக்கை இல்லா தீர்மான மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட  ஆணையர், 29 ஆம் தேதி (நாளை) விவாதம், மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என  அறிவித்தார்.

ஏற்கனவே மேயருக்கு எதிராக 10 திமுக கவுன்சிலர்கள் தங்களது நிலைக் குழு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பல கட்டங்களாக பேச்சுவார்த்தை  நடந்தும் எந்த முனேற்றமுகம் ஏற்படவில்லை. இறுதியாக அமைச்சர் கே என் நேரு முன்னின்று பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பினர்க்கும் இடையே எந்த உடன்பாடும்  எட்டவில்லை. இந்நிலையில், வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில்,  திமுக கவுன்சிலர்கள் 22 பேர் தங்கள் குடும்பத்தினருடன்  சுற்றுலா சென்றுள்ளனர் 

நாளைய வாக்கெடுப்புக்கு பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள்  வராவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்து, மேயர் மகாலட்சுமி யுவராஜின்பதவி காப்பாற்றப்படும். ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டால்,   அடுத்த ஓராண்டுக்கு மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Voting tomorrow....22 Councilors escape kancnhipuram mayor post will save?


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->