கவனர் ரவி குறித்து பேசிய சபாநாயகர்; எதிர்ப்பு கிளம்பியதால் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு..!
walked out of the conference due to opposition
அகில இந்திய மாநில சட்டசபை, சபாநாயகர்கள் மாநாட்டிலிருந்து தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு திடீரென வெளிநடப்பு செய்துள்ளார்.தமிழக கவர்னர் ரவி குறித்து பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவர் வெளிநடப்பு செய்துள்ளார்.
இந்திய அரசியல் சாசனத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அகில இந்திய மாநில சட்டசபை சபாநாயகர்கள்,யூனியன் பிரதேச சட்டசபை சபாநாயகர்களின் 85வது மாநாடு பீஹார் தலைநகர் பாட்னா நகரில் இரு நாட்கள் நடைபெறுகிறது.
இதில் அனைத்து மாநில சட்டசபை மற்றும் யூனியன் பிரதேச சட்டசபை சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். குறித்த மாநாட்டில் தமிழகம் சார்பில் சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர். இன்றைய மாநாட்டை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தொடங்கி வைத்தார்.
இம்மாநாட்டில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பேசும் போது தமிழக கவர்னர் ரவி குறித்து பேசியதாகவும், இதற்கு ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் இடைமறித்து ஆட்சேபணை தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு பேச எதிர்ப்பு கிளம்பியதால் மாநாட்டிலிருந்து சபாநாயகர் அப்பாவு பாதியிலேயே வெளிநடப்பு செய்துள்ளார்.
English Summary
walked out of the conference due to opposition