போராட்டத்தை அறிவித்த தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள்! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய மத நலன் மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக கொடையாக வழங்கப்பட்ட சொத்துகளை நிர்வாகம் செய்வதற்கான வக்ஃப் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கான முன்வரைவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த முன்வரைவில் 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தின் பெயரை மாற்றுவது உள்ளிட்ட 44 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 

வக்ஃப் வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலராக இணைச் செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்; 

அவர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை,  வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத இருவரை நியமிக்க வேண்டும், 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட புகழ்பெற்ற நபர்களை வக்ஃப் வாரியத்திற்கு நியமிக்கும் போது அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, 

ஒரு சொத்து வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானதா, அரசுக்கு சொந்தமானதா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை வக்ஃப் வாரியத்திடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுவது, வக்ஃப் சொத்துகள்

குறித்த சிக்கல்களை விசாரிப்பதற்கான தீர்ப்பாயத்தின் அதிகாரத்தைக் குறைப்பது போன்றவை தான் வக்ஃப் சட்ட முன்வரைவில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களில் முக்கியமானவை.

இந்நிலையில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து அக்டோபர் 4ஆம் தேதி மக்கள் திரள் போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா தெரிவிக்கையில், வரலாற்றிலேயே 115 திருத்தங்கள் கொண்ட திருத்த மசோதா இது. இதனை கண்டித்து வரும் 4 ஆம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்களின் இந்த போராட்டத்தில் திமுக காங்கிரஸ் இடதுசாரிகள் பங்கேற்பார்கள்" என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

waqf amendment bill TN  Islam Protest announce


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->