வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா; ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது என்கிறார் திருமாவளவன்..!
Waqf Board Amendment Bill Thirumavalavan says it is against the entire nation
கடந்த 1995, 2013-ஆம் ஆண்டுகளில் வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்டு 08-ந்தேதி தாக்கல் செய்தது. அதன் பின் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தங்களது உரையை நிகழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வக்ஃப் மசோதாவை எதிர்த்துப் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, "இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அவர்களும் மக்களவையில் வக்ஃப் மசோதாவை கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார். அதாவது, ''இஸ்லாமியர்களின் ஒற்றுமையை சிதைக்கும் முயற்சி இது. நீதித்துறையின் மீது நேரடித் தாக்குதல் இது.." என்று கடுமையாக எதிர்த்துள்ளார்.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் அவர்களும் " பாஜக ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இந்த வக்ஃப் மசோதாவை கொண்டு வருகிறது என்பது புரிகிறது. 2 காரணங்களுக்காக இந்த வக்ஃப் மசோதாவை நான் எதிர்க்கிறேன்" என்று அவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
English Summary
Waqf Board Amendment Bill Thirumavalavan says it is against the entire nation