மிரட்டி மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை - வானதி சீனிவாசன்! - Seithipunal
Seithipunal


கோவை கொடிசியாவில்  தொழில் முனைவோர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவக நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. ஆனால் காரத்திற்கு 12 சதவீதம் இருக்கும் நிலையில், இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்று கூறினார். 

மேலும்  Bun-க்கு  ஜி.எ.ஸ்.டி இல்லாத நிலையில், அதற்கு உள் வைக்கும் க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி உள்ளது. இந்த நிலையில், க்ரீமை கொண்டு வா நானே வச்சிக்கிறேன் என்று வாடிக்கையாளர் கூறியதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் கடை நடத்த முடியல மேடம் என்றும், ஒரே மாதிரி வையுங்கள் என்று தந்து ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக  பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது பேசிய அவர்,  அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் சீனிவாசன் தாமாக முன்வந்து மன்னிப்புக் கேட்டதாகவும், நான் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன் என வருத்தம் தெரிவித்ததாக கூறினார். மேலும், சீனிவாசனை மிரட்டி பணிய வைத்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று கூறிய அவர், சீனிவாசன் எனக்கு போன் செய்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். 

தான் பேசியது இணையதளத்தில் வேறுமாதிரி சொல்வதாக வருத்தம் தெரிவிப்பதாக சீனிவாசன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அன்னபூர்ணா ஓட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்சினை செய்ததாக சீனிவாசன் கூறினார். நான் இதுவரை அன்னபூர்ணா ஓட்டலில் ஜிலேபி சாப்பிட்டதோ, பிரச்சினையில் ஈடுபட்டதோ இல்லை என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We do not need to threaten and apologize Vanathi Srinivasan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->