இஸ்லாமியர்களின் வாக்கு தேவையில்லை! பாஜக மூத்த தலைவர் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவரின் வாக்கு கூட எங்களுக்கு தேவையில்லை என்று, பாஜகவின் ஈஸ்வரப்பா பிரச்சாரம் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே மாதம் பத்தாம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பதற்கு உண்டான வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

அதே சமயத்தில் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு, காங்கிரஸ் கட்சியும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளது.

மேலும் முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தள கட்சியும், முதலமைச்சர் பதவியை கைப்பற்றி, கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கு, குறிப்பிட்ட 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு உண்டான வியூகங்களை வகுத்து சுனாமி பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளது.

தேர்தல் நெருங்க நெருங்க கர்நாடக மாநில அரசியலில் பாஜகவுக்கு தொடர் பின்னடைவாகவே இருந்து வருகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கும், மதசார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கும் ஆதரவான ஒரு நிலைப்பாட்டை மக்கள் எடுக்கும் வகையில், ஒவ்வொரு சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. 

இந்த நிலையில், பாஜகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பேசியது அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலம், ஷிவமோகவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவரின் வாக்கு கூட எங்களுக்கு தேவையே இல்லை என்று தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We dont want Muslim vote BJP leader KS Eshwarappa


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->