மோடியை பெரியாராக மாற்றம் முயற்சிக்கும் தமிழக பாஜக; மோடி மாறி வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்- விசிக திருமாவளவன். - Seithipunal
Seithipunal


பெரியாரும் மோடியும் ஓரே தேதியில் பிறந்தது தற்செயலான நிகழ்வு!

சென்னையில் இன்று செய்தியாளர்களை விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர் ஒருவர் பெரியார் பிறந்த தினமும், பிரதமர் மோடியின் பிறந்த தினமும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. அப்போது சமூகநீதி காத்தவர் மோடி என பாஜகவினர் கூறியது பற்றி உங்களின் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு பதில் அளித்த திருமாவளவன், "பாஜகவினர் தங்களின் கட்சித் தலைவரை கொண்டாடுகின்றனர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பெரியார் பிறந்த அதே நாளில் மோடியும் பிறந்தது தற்செயலாக நடந்த நிகழ்வு.

அவரை தமிழக பாஜகவினர் பெரியாராக மாற்ற முயற்சி செய்கிறார்கள். அவ்வாறு பெரியாராக மாறி வந்தால் நல்லது. சனாதன எதிர்ப்பாளராக மோடி வந்தால் அவருக்கு இரத்தின கம்பளம் வரவேற்பு அளிப்போம்" என திருமாவளவன் பதிலளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

we will welcome modi with a carpet of jewels VCK Thirumavalavan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->