சமத்துவம் தழைக்க - சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம்: உதயநிதி ஸ்டாலின்..!
We will work with determination to establish equality to establish a caste-free society Udhayanidhi Stalin
'காலனி' எனும் சொல்லை திராவிட மாடல் அரசு நீக்கவிருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
'பெயர்களில் இருந்த சாதி ஒட்டினை ஒழித்த திராவிட இயக்கத்தின் வழியில், ஊர்களில் இருக்கும் 'காலனி' எனும் சாதிய அடக்குமுறைச் சொல்லை நீக்கவிருக்கிறது நம் நம் திராவிட மாடல் அரசு.
முதல்-அமைச்சர் மு.க .ஸ்டாலினின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை மனதார வரவேற்கிறோம். ஈராயிரம் ஆண்டுகள் இறுகிப்போய் இருக்கும் சாதியை வீழ்த்துவதற்கான பயணத்தில் முக்கிய மைல்கல் இது. சமத்துவம் தழைக்க - சாதியில்லா சமூகம் அமைக்க என்றும் உறுதியுடன் உழைப்போம்.' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
We will work with determination to establish equality to establish a caste-free society Udhayanidhi Stalin