மாநிலத்தின் அதிகாரத்தை பெறுகிறார் ஆளுநர்., முக்கிய வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநில ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று, அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவைச் சேர்ந்த ராம் என்பவர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.  

அவரின் அந்த பொதுநல மனுவில், "மேற்கு வங்க மாநில ஆளுநர், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். எனவே அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று அந்த பொதுநல மனுவில் தெரிவித்து இருந்தார்.

உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், அரசியலமைப்பு சாசனம் 361 -ன் படி, மாநிலத்தின் ஆளுநர் அதிகாரம் படைத்தவர் ஆகிறார். எந்தவொரு நீதிமன்றமும் ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவு பிறப்பிக்க முடியாது. 

இருப்பினும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு ஆளுநரின் செயல்படுகிறார் என்பதை நிரூபிக்கும் பட்சத்தில் மட்டுமே நீதிமன்றங்கள் இதில் தலையிட முடியும் என்று, தெரிவித்த உயர்நீதிமன்றம், ஆளுநரின் பதவி நீக்கம் செய்யக்கோரி மத்திய அரசுக்கு உத்தரவிடுவதற்கான இந்த பொதுநல மனுவில் போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WestBengalHC Jagdeep Dhankhar 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->