பாஜக செய்தது கேவலமான விஷயம்!...நிர்மலா சீத்தாராமனிடம் மனித தன்மை இல்லை - EVKS இளங்கோவன் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


கோவை கொடிசியாவில்  தொழில் முனைவோர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவக நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. ஆனால் காரத்திற்கு 12 சதவீதம் இருக்கும் நிலையில், இந்த முரண்பாடு களையப்பட வேண்டும் என்று கூறினார். 

மேலும்  Bun-க்கு  ஜி.எ.ஸ்.டி இல்லாத நிலையில், அதற்கு உள் வைக்கும் க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி உள்ளது. இந்த நிலையில், க்ரீமை கொண்டு வா நானே வச்சிக்கிறேன் என்று வாடிக்கையாளர் கூறியதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் கடை நடத்த முடியல மேடம் என்றும், ஒரே மாதிரி வையுங்கள் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ஈரோட்டில் இன்று தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனிடம் அடக்கமும் பணிவும் இல்லையென்று கூறிய அவர், அன்னப்பூர்ணா உரிமையாளர் ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்துங்கள் என சொன்னதற்கு, ஆளை வைத்து மிரட்டியும், தொலைபேசி மூலம் மிரட்டியும், மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம் என்று கூறினார். 

மேலும், மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் கல் போன்று அமர்ந்துள்ளதாக தெரிவித்த அவர், மனிதனை மதிக்கும் மனித தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை என்றும், இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களும், வியாபாரிகளும் பா.ஜ.க.விற்கு எதிர்ப்பாக செல்கிறார்கள். வரும் காலங்களில் இது பெரிதாக வெடிக்கும் என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What BJP has done is despicable Nirmala Sitharaman has no humanity EVKS elangovan Review


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->