ஜெகத்ரட்சகனுக்கு கருப்புக்கொடி காட்டிய திமுகவினர்..நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளூரில், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளருடன்
திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஊருக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் பறக்கவிட்டு திமுகவினரே  எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார்.நெமிலி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஜெகத்ரட்சகன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.  இந்நிலையில் நெமிலியை அடுத்த பள்ளூர், இலுப்பைதண்டலம் , கீழ் வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் நெமிலி ஒன்றிய குழு தலைவருமான வடிவேலுவுடன் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஊருக்குள் வரக்கூடாது.  நாங்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்வோம் என்று சமூக வலைதளங்களில் திமுகவினர் பதிவிட்டிருந்தனர்.  அதனால் சில கிராமங்களுக்கு செல்வதை வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தவிர்த்துள்ளாராம் .

ஆனாலும் ,பள்ளூர் கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலுவுடன் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் சென்றார். அப்போது ,ஊருக்கு வெளியே தயாராக நின்றிருந்த திமுகவினர் கையில் கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன்களை வைத்துக்கொண்டு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் உடன் வேட்பாளர் வந்தால் அவரை ஊருக்குள் விடமாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கிடையே, திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஒன்றிய செயலாளருடன் ஊருக்குள் பிரச்சார வாகனங்களுடன் செல்ல முயன்றார்.அப்போது திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.அங்கிருந்த போலீசார் கோஷங்கள் எழுப்பியவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். மேலும் அவர்கள் வைத்திருந்த கருப்புக்கொடி , கருப்பு பலூன்களை பிடுங்கி கீழே எறிந்தனர். இந்த கலவரத்துக்கு இடையே வேட்பாளர் ஜெகத்ரட்சகன் , நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலு மற்றும் நிர்வாகிகள் பள்ளூரில் வாக்கு சேகரித்துவிட்டு அங்கிருந்து திரும்பினார்.  அப்போதும் திமுக நிர்வாகிகள், இங்கு திமுக படுதோல்வி அடையும் என்று கோஷம் எழுப்பினர்.


அது மட்டுமன்றி ஏற்கனவே பள்ளூர்  பகுதி சுவர்களில் வரைந்திருந்த உதயசூரியன் சின்னத்தை அழித்திருந்தனர். மேலும், போஸ்டர்களை கிழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் விரட்டியடிக்கப்பட்டார்.நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலுடன் வேட்பாளர் எங்கள் கிராமத்துக்கு வரக்கூடாது என்றும்  நாங்கள் தேர்தல் வேலை செய்ய மாட்டோம் தேர்தலை புறக்கணிப்போம் என்றும்  திமுகவினர் கோஷமிட்டபடி கலைந்துசென்றனர்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளருக்கு திமுகவினரே எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நெமிலி பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What happened to DMK who showed black flag to Jagatrashagan?


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->