ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் எப்போது பதவியேற்பு?...இதோ வெளியான தகவல்!
When will hemant soran take oath as the chief minister of jharkhand here is the information
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு நடப்பு மாதம் நவம்பர் 13-ம் தேதி 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில்,
கடந்த 20-ம் தேதி மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
இந்த தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், 20-ம் தேதி பதிவான வாக்குகள் வாக்குச்சாவடிகளில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதன் படி, மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 56 இடங்களை கைப்பற்றியது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களும், காங்கிரஸ் 16, ராஷ்டிரீய ஜனதாதளம் 4, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2 இடங்கள் பெற்றது.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதா 21 இடங்கள், ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, ஜார்கண்ட் மாணவர் யூனியன் கட்சிகள் தலா ஒரு இடங்களில் வென்றது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
When will hemant soran take oath as the chief minister of jharkhand here is the information