திமுகவின் இணைய கூலிப்படை! யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் தாக்குதல் தான்!  - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில், ஆளும் திமுக அரசு மற்றும் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள், முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்தாலோ, கண்டனம் தெரிவித்தாலோ, அது திமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகளாக இருந்தால் கூட, அவர்களை ஒருமையில் கடுமையாக விமர்சிக்க கூடிய ஒரு கும்பல் "திமுகவின் இணைய கூலிப்படை" உருவாகியுள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர். 

அண்மையில் நடிகர் விஜய் கட்சியின் பொதுச் செயலாளரான ஆனந்த் அளித்த பேட்டியை ஸ்லோமோஷனில் எடிட் செய்து மது போதைகள் பேட்டி அளிப்பதாக சிலர் பரப்பி வந்தனர்.

இதுகுறித்து 'வலைப்பேச்சு' பிஸ்மி அமபலப்படுத்தியாயத்துடன், இதனை செய்தது "திமுகவின் இணைய கூலிப்படை" தான் என்று பகிரங்கமாக தெரிவித்தார். 

இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த ராஜ் சத்யன் அதே வார்த்தையை பயன்படுத்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தொழிலாளர்களின் கோரிக்கையினை பேசித் தீர்க்க திராணியற்று நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் விடியா அரசை நியாயமாக கேள்வி எழுப்பிய கம்னியூஸ்ட் கனகராஜ், பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் தோழர்களை, கூட்டணிக்குள் கூட ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாத திமுக, தன் இணையக் கூலிப்படையை ஏவி திட்டவைக்கிறது.

இதே போல் தான் சில நாட்களுக்கு முன்பு உண்மைக் கருத்துகளைச் சொன்ன மற்றொரு கூட்டணிக் கட்சியான விசிக துணை பொதுச்செயலாளர் சகோதரர் ஆதவ் அர்ஜுனன் அவர்களை டார்கெட் செய்து இணைய தாக்குதலில் ஈடுபட்டனர்.

கூட்டணிக் கட்சியினரின் குரலுக்கே மதிப்பு இல்லாமல் ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படும் போது, இந்த #விடியா_திமுகமாடல் ஆட்சி மக்களுக்கானது அல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது" என்று தெரிவித்துள்ளார்.

திமுகவின் இணைய கூலிப்படை என்ற வார்த்தையை பயன்படுத்தி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருக கூட ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், "சாம்சங் நிறுவனத்திற்கு புரோக்கர் வேலை பார்க்கும் திமுக ஐடி விங்! தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் போராட்டத்தை திசைதிருப்ப இப்போது பொய் பரப்பரை செய்ய துவங்கியுள்ளது திமுகவின் இணைய கூலிப்படை. 

சாம்சங் நிறுவனம் வேறு நாட்டிற்கு செல்கிறது என்று சொன்னால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என்று அஞ்சமூட்டி வருகிறது!

பல மடங்கு லாபத்தை ஈட்டக்கூடிய நிறுவனம் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவிதில் என்ன பிரச்சனை! கூட்டணி கட்சிகள் கண்டித்த பிறகும் கூட சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது திமுக அரசு" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who is DMK Inaiya Koolipadai ADMK NTK VCK CPI CPIM Vijay TVK


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->