டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார்? அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நாளை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விலகுவது உறுதியாகியுள்ளது. 

புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கினாலும்,  முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது, எந்தவித கோப்புகளிலும் கையெழுத்திடக்கூடாது என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை இன்னும் இரண்டு தினங்களில் ராஜினாமா செய்ய உள்ளதாக நேற்று அறிவித்திருந்தார். 

டெல்லி டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நாளை காலை 11 மணியளவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவு எட்டப்பட உள்ளதாகவும், அதன் பிறகு டெல்லி துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் சமர்ப்பிக்க உள்ளார் என்றும்  உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் பட்டியலில், மணீஷ் சிசோடியா, கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, அதிஷி, கோபால் ராய் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who is next Delhi CM Arvind Kejriwal AAP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->