தமிழகத்தின் அடுத்த பா.ஜ., தலைவர் யார்..? வெளியான அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் அடுத்த பா.ஜ., தலைவர் யார் என எதிர்பார்ப்பு நிலவி வருகின்ற நிலையில், தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், நாளை (ஏப்ரல் -11) மதியம் 02 மணி முதல் 04 மணி வரை வேட்பு மனுக்களை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பா.ஜ., உட்கட்சி தேர்தல், கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கி நடந்து வருகிறது. தேசிய தலைவர் தேர்தலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநில தலைவர் தேர்தலும் நடக்கவுள்ளது.

அடுத்த பா.ஜ., மாநில தலைவர் தேர்தல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். 

இந்நிலையில், புதிய தலைவர் என பல பேரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னை வர உள்ளார். இதனால் புதிய மாநில தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுதும் உள்ள தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ., மாநில துணைத்தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கட்சியின் அமைப்பு தேர்தல் திருவிழாவின் இறுதிக்கட்டத்தை நாம் அடைந்து உள்ளோம். கிளை துவங்க மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்போது இறுதியாக மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. மனுக்களை கட்சியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

நாளை (ஏப்.,11) வெள்ளிக்கிழமை மதியம் 02 மணி முதல் மாலை 04 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள், விருப்ப மனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சர்ப்பிக்க வேண்டும்.மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் 'F' பூர்த்தி செய்ய வேண்டும். 

மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்வு செய்யப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரின் பரிந்துரைக்க வேண்டும்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் படிவம் 'E' பூர்த்தி செய்ய வேண்டும். மநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன் மொழி ய மறறொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேவேளை, சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர் குருமூர்த்தியை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வர உள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who is the next BJP leader of Tamil Nadu Announcement released


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->