கோடைக்கால பயிற்சி முகாம் : மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் அழைப்பு!
Summer Coaching CampDistrict Collector M Pratap called
திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு பிரிவில் கோடைக்கால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தகவல் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு பிரிவில் 2025-ம் ஆண்டிற்கான கோடைகால பயிற்சி முகாம்' வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை தொடர்ந்து 21 நாட்களுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, கைப்பந்து, வளைகோல்பந்து மற்றும் வுஷூ ஆகிய 5 விளையாட்டுகள் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியானது தடகளம், கால்பந்து மற்றும் வுஷூ ஆகிய 3 விளையாட்டுகள் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில், வளைகோல் பந்து விளையாட்டு ஆவடியில் உள்ள காஸ்மோஸ் மைதானத்திலும் மற்றும் கைப்பந்து விளையாட்டு தமிழ்நாடு சிறப்பு காவல்.13ஆம் அணி, வைஷ்ணவி நகர், ஆவடி மைதானத்தில் (முருகப்பா பாலிடெக்னிக் அருகில்) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தடகளம் லாவண்யா – 8072908634, கால்பந்து காயத்ரி – 9566256028, வுஷூ தீபன் – 9944290515, கைப்பந்து வினோத்ராஜ் – 9894028353 மற்றும் வளைகோல்பந்து இளங்கோ - 9444845842 என்ற எண்ணில் விளையாட்டு பயிற்றுநர்களை தொடர்புக்கொண்டு இந்த கோடைகால பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம்.
மேலும் இப்பயிற்சி முகாமானது முற்றிலும் இலவசமாக நடைபெற்று பயிற்சியின் இறுதி நாளில் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஆகவே திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த மாணவ,மாணவிகள் பயன்பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்தார்.
English Summary
Summer Coaching CampDistrict Collector M Pratap called