அட பாவி!!!சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு 'சிகரெட்' கொடுத்த மருத்துவர்...!!!
doctor who gave cigarette boy who came treatment
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜலான் நகரில் 5 வயது சிறுவனின் பெற்றோர், சிறுவனுக்கு சளி பிடித்ததால் மாவட்ட சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பணியிலிருந்த மருத்துவர் 'சுரேஷ் சந்திரா' சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதாக தெரிவித்து தனியே சிறுவனை 'சிகரெட்' பிடிக்க வைத்துள்ளார்.
இதன் வீடியோ இணையத்தில் வெளியாகியது.அந்த வீடியோவில்,'சிகெரட்டை சிறுவனிடம் மருத்துவர் கொடுத்து, அவனின் வாயில் வைக்க சொல்லி, அந்த சிகரெட்டை மருத்துவர் பற்ற வைக்கிறார்.
பின் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் சிறுவன் சிகெரெட்டை பல முறை புகைக்கிறான்'.மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இச்சம்பவம் கடந்த மாதம் நடந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர் 'சுரேஷ் சந்திரா' பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
English Summary
doctor who gave cigarette boy who came treatment