அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர்...!!! அவர் வழங்கிய நலத்திட்ட பணிகள் என்னென்ன தெரியுமா?
CM participated ceremony distribute government welfare assistance welfare services he provided
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருவள்ளூர் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் ரூ.357.43 கோடி மதிப்பில் 2,02,531 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,"நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். அதற்கு நான் காரணம் அல்ல, நாசர் தான் காரணம்.பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்ததால் நிகழ்ச்சிக்கு வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது.நவீன தமிழகத்தின் சிற்பி என போற்றப்படுபவர் தான் கலைஞர், அதற்கு அடையாளம் தான் இந்த மாவட்டம்.
திருவள்ளூரை சுற்றி தற்போது உள்ள தொழில் வளர்ச்சிக்கு கலைஞர் தான் காரணம். கார் உற்பத்தியில் தொடங்கி, கண்ணாடி உற்பத்தி ஆலை வரை கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டது.எண்ணூரில் ரூ.18,000 கோடியில் அனல் மின் நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெரியபாளையம், திருவேற்காடு, சிறுவாபுரி கோவில்களில் திருப்பணிகள் நடைபெறுகின்றன.கடம்பூர், தண்டலம் சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.காக்களூர் ஊராட்சியில் தாமரைக்குளத்தை மேம்படுத்த ரூ.2 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
பழவேற்காடு ஏரியில் சூழலியல் சுற்றுலா வசதி ஏற்படுத்தி தரப்படும்.திருமழிசை- ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடியில் அகலப்படுத்தப்படும்.வைரவங்குப்பன் மீனவ கிராமத்தில் வலைப்பின்னும் கூடம் அமைக்கப்படும்.63 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவது தான் மகிழ்ச்சியை தருகிறது.
அனைத்து திட்டங்களும் திருவள்ளூருக்கே செல்வதா மலைப்பாக உள்ளது.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் முடங்கி கிடந்த உட்கட்டமைப்பு வளர்ச்சி பணிகள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கொடுத்து தன்னம்பிக்கையே ஏற்படுத்தி உள்ளோம்.
குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தால் தாய்மார்களின் வேலை குறைந்துள்ளது.தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளோம்.வளமான தமிழ்நாடாக மட்டும் அல்ல, நலமான தமிழ்நாட்டையும் உருவாக்கி உள்ளோம்.மாநில உரிமைகளின் அகில இந்திய முகமாக தமிழகம் தான் உள்ளது.உள்ளாட்சி அமைப்புகளின் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
English Summary
CM participated ceremony distribute government welfare assistance welfare services he provided