அடுத்த முதலமைச்சர் யார்?...மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் தொடங்கியது வாக்குப்பதிவு! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தொடர்ந்து  மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மேலும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை ராஜ்பவனில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார். முன்னதாக, மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும், பாராமதி சட்டசபை தொகுதியின் என்.சி.பி. வேட்பாளருமான அஜித் பவார்,  பாராமதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதே போல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டசபைக்கு நடப்பு மாதம் நவம்பர் 13-ம் தேதி 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில்,
இன்று  மீதமுள்ள 38  தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who will be the next chief minister voting has started in maharashtra and jharkhand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->