திருச்சூரில் 3ம் இடம் பிடித்த காங்கிரஸ் - கட்சிக்குள் பிரிவு - என்ன காரணம்?
Why Congress Got Down 3rd Place in Thrissur
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டது. மேலும் கேரளாவில் காங்கிரஸ், பாஜக, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நடைபெற்றது.
கேரளாவின் 20 பாராளுமன்றத் தொகுதிகளில் வயநாடு, திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் ஆகிய 3 தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக கருதப்பட்டன. மேற்கண்ட தொகுதிகளில் வயநாட்டில் ராகுல் காந்தியும், திருவனந்தபுரத்தில் சசி தரூரும், திருச்சூரில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபியும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் 20 க்கு 19 இடங்களில் வென்ற காங்கிரஸ் கூட்டணி இந்த முறை 18 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த முறை திருச்சூர் தொகுதி காங்கிரசின் வசம் இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் அங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வென்றுள்ளார். தொடர்ந்து 2ம் இடத்தை கம்யூனிஸ்ட் கட்சி பிடித்தது.
மேலும் கடந்த முறை வென்ற தொகுதியில் தற்போது காங்கிரஸ் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது, அக்கட்சிக்கு பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய கட்சி தலைமை 3 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை நியமித்துள்ளது. முன்னதாக கட்சியில் ஒரு பிரிவினர் வேட்பாளர் முரளிதரனுக்கு எதிராக செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நாளை திருச்சூர் தொகுதியில் நாளை காங்கிரஸ் தோல்வி குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளதால் கேரள காங்கிரசில் பரபரப்பு தொற்றியுள்ளது
English Summary
Why Congress Got Down 3rd Place in Thrissur