குளிரூட்டும் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம் மக்கள் உயிரை காக்க தவறியது ஏன்? - தமிழிசை அடுக்கடுக்காக சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பக்கத்தில், குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம் என்றும், நிகழ்ச்சி முன்னேற்பாடு  குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது ஏன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நடிகர் திரு.விஜய் கட்சியின் மாநாட்டிற்கு 21 கேள்விகள்,விநாயர் சதுர்த்தி ஊர்வலம்,கோயம்பேட்டில் நடக்கவிருந்த பாஜகவின் மாநாடு, அதேபோல் ஆண்டாண்டு நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேர் வருவார்கள், எங்கே கார் நிறுத்தம், எங்கே பேருந்து நிறுத்தம், எங்கே உணவு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எங்கே மருத்துவ மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள்,இருசக்கர ஆம்புலன்ஸ் வசதி, எத்தனை மருத்துவர்கள்,எத்தனை செவிலியர்கள்,எத்தனை உதவியாளர்கள் என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கும் தமிழக அரசு, நம் இந்திய நாட்டின் விமானப்படை நடத்தும் நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கார் ரேசுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை முந்தைய நாளே முன் நின்று கவனித்த இன்றைய துணை முதலமைச்சர் தேசத்தின் பெருமையை பரைசாற்றும் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன?

மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன் என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why did the ruling class sitting in the front line of cooling fail to save people lives tamilisai layered barrage of questions


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->