அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கேள்விக்கு, செங்கோட்டையன் பதில் கூறாதது ஏன்?
Why didnt Sengottaiyan answer question AIADMK MLAs
இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் தமிழக சட்டசபையில் நடைபெற்று வருகிறது. அப்போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சட்டமன்றத்தில் செங்கோட்டையனிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டெல்லி பயணம் தொடர்பாக கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
"ஏன் டெல்லி சென்றீர்கள்? " என கடம்பூர் ராஜு , அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, அம்மன் அர்ஜூனன் ஆகியோர் கேட்டதாகவும் அதற்கு செங்கோட்டையன் பதில் எதுவும் தெரிவிக்காமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டசபையின் தொடக்கத்தில் சபாநாயகர் அறையில் செங்கோட்டையன் அமர்ந்தது சர்ச்சையான நிலையில் தற்போது சபாநாயர் அறையில் இருப்பதை தவிர்க்க 9.25 மணிக்கு சபைக்கு வருகிறார்.
மேலும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையிலேயே செங்கோட்டையன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதைப்பற்றி பல தரப்பினரிடமிருந்து பல கேள்விகள் எழுந்து வருகிறது.
English Summary
Why didnt Sengottaiyan answer question AIADMK MLAs