மணிப்பூரில் வன்முறையை நிறுத்த மோடி ஏன் விரும்பவில்லை!.... மணிப்பூருக்காக ஒரு நொடி கூட மோடி செலவிடவில்லை!....கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மணிப்பூர் சூழல் பிரதமர் நரேந்திர மோடியின் மோசமான தோல்வி என்றும், அதை மன்னிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 16 மாதங்களில் மணிப்பூருக்காக ஒரு நொடி கூட பிரதமர் மோடி செலவிடவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் தொடர்கிறது. பாஜக அரசுக்கு உடந்தையாக இருந்ததன் விளைவுகளை மக்கள் அனுபவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், மணிப்பூர் மக்களின் குரலை எதிரொலித்த அம்மாநில முன்னாள் ஆளுநர் அனுசுயா உய்கே பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரியதாக குறிப்பிட்டுள்ள அவர், மணிப்பூர் முதலமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று சாடியுள்ளார். 

மணிப்பூர் வன்முறையை விசாரிக்கும் சிபிஐ, என்ஐஏ மற்றும் பிற அமைப்புகளை மோடி அரசு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று குற்றம் சாட்டியுள்ள கார்கே, மணிப்பூரை தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல்களில் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் பிரதமர் மோடி மும்முரமாக இருக்கிறார். எங்கள் மாநிலத்தில் நிலவும் வன்முறையை நிறுத்த பிரதமர் மோடி ஏன் விரும்பவில்லை என்று மணிப்பூர் மக்கள் கேட்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why does not modi want to stop the violence in manipur modi ha not spent even a second for manipur kharge sensational accusation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->