பாஜகவிற்கு இன்னும் 7 நாட்கள் மட்டும் தான்..! ஜூன் 4ம் தேதியுடன் குட் பை..! ராகுல் காந்தி பேச்சு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் ஆறு கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில், தற்போது ஏழாம் கட்டத் தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது, " பாஜகவிற்கு இன்னும் ஏழு நாட்கள் தான் உள்ளன. ஜூன் 4ம் தேதி பாஜகவிற்கும், மோடிக்கும் குட் பை. பாஜகவின் பாசிச ஆட்சி ஜூன் 4ம் தேதியுடன் முடிவுக்கு வரப்போகிறது.

பிரதமர் மோடி தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறினார். அவர் கூறியது போல் அவரது பிறப்பு உயிரியல் பிறப்பல்ல. கடவுளால் தான் உருப்பெற்றார் என்றால் அவரது பிறப்பு உழைக்கும் மக்களுக்காகவோ, ஏழை எளியவர்களுக்காகவோ அல்ல. அவர் அம்பானி, அதானிகளுக்கானவர்.

தேர்தலுக்குப் பின்னர் ஏதேனும் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை மோடியிடம் விசாரணை மேற்கொண்டால், இதற்கெல்லாம் நான் காரணமல்ல. என் எல்லா செயல்களுக்கும் பரமாத்மா தான் காரணம் என்று கூறி மோடி தப்பித்துக் கொள்வார்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will Say Good Bye to BJP on June 4 Rahul Gandhi Speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->