தவெக மாநாடு நடக்குமா?...நடக்காதா?...மாநாட்டு பணிகளின் அப்டேட் இதோ! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இதில் இழுபறி நீடித்த நிலையில்,   தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் இந்த மாதம் 23-ம் தேதி போலீசார் அனுமதி வழங்கியதோடு, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகளை விதித்தனர்.

பின்னர்  காவல்துறையின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய நாட்கள் இல்லாததால், மாநாடு தேதி தள்ளிப்போனது.

இதற்கிடையே தவெக முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், மாநாடு பணிகளை மேற்கொள்ள 23 முதல் 30 குழுக்கள் வரை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் மாநாடு பணிகளை ஒரு வாரத்திற்கு முன்னதாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will the conference be held or not here is the update of the conference proceedings


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->