திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையுமா?...தவெக-விற்கு வலைவீசும் காங்கிரஸ்?...திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் கூறிய ஆட்சியில் பங்கு என்பது குறித்து, கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று காங்கிரஸ் முன்னாள்  மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று அவருக்கு மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்து புதிதாக மாநாடு நடத்தி இருப்பதற்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்.

மேலும், நடிகர் விஜய்யின் கூட்டணியோ அல்லது அரசாங்கத்தில் பங்கு என்ற கோஷம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியது தான் என்றும், ஆனால் ஆட்சியில் பங்கு என்பது குறித்து கட்சி தலைமை எடுக்க வேண்டிய முடிவு என்றும், அது வெற்றி பெறும் எண்ணிக்கையை பொறுத்தது என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Will the dmk congress alliance break congress will cast a net for tvk


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->