அழைப்பு! விஜய் நாளை மாவட்ட பொறுப்பாளர்களை சந்திக்கிறாரா!!!
Will Vijay meet the district officials tomorrow
தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இதில் த.வெ.க வின் 6ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட செயலாளர்கள் நேர்காணல் நாளை நடைபெறவுள்ளது.
அந்த வகையில், மாவட்ட பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை நேரில் சந்திக்கவுள்ளார். ஏற்கனவே தமிழக வெற்றிக்கழகத்தில் 95 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனால், ஏற்கனவே சந்தித்தவர்களை தவிர்த்து, மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் நாளை நேரில் வரும்படி கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாளை காலை 11 மணியளவில் மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் சந்திக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதுத்தொடர்பாக பல விமர்சனங்களை தமிழக வெற்றிக்கு கழகம் பெற்று வந்தாலும் தொடர்ந்து கட்சியின் வளர்ச்சியில் மும்புரமாக விஜய் இருக்கிறார்.
English Summary
Will Vijay meet the district officials tomorrow