திமுக கூட்டணியை பிரிக்க விருப்பம்?... - எம்.பி துரை வைகோ பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க. போன்ற மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வேறூன்றக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று  திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது என்றும், அது ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்திய அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என்று சாடினார்.


மேலும் தி.மு.க. தலைமையிலான எங்கள் {மதிமுக} கூட்டணி வலுவாக இருப்பதாக தெரிவித்த அவர், இந்த கூட்டணியில் ஏதாவது பிரச்சினை வராதா என்பது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில அரசியல் கட்சியினரின் விருப்பமாக இருக்கலாம் என்று விமர்சித்தார்.


தொடர்ந்து பேசிய எம்.பி துரை வைகோ,  எங்கள் கூட்டணியில் இருக்கும் அனைவரும் நல்ல புரிந்துணர்வோடு இருக்கிறார்கள் என்றும், பா.ஜ.க. போன்ற மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வேறூன்றக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று  தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Willingness to split the DMK alliance MP Durai Vaiko sensational interview


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->