ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல்: நம்ம இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?
World Worst Scam Country top 10
ஊழல் தரவரிசை 2024 ஆம் ஆண்டு மேலும் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பின் தகவலின்படி, 180 நாடுகளுக்கிடையில் இந்தியா 96-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
2023-இல் 39 மதிப்பெண்கள் பெற்ற இந்தியா, 2024-இல் 38 மதிப்பெண்களுடன் மூன்று இடங்கள் பின்னடைந்தது.
ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் (90) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, பின்லாந்து (88) மற்றும் சிங்கப்பூர் (88) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதே நேரத்தில், தெற்கு சூடான் (8), சோமாலியா (9) மற்றும் வெனிசூலா (10) ஊழல் மிகுந்த நாடுகளாக தெரிவாகியுள்ளன.
தெற்காசியாவில் பாகிஸ்தான் 135-வது இடத்திலும், இலங்கை 121-வது இடத்திலும் உள்ளது. சீனா 76-ஆவது இடத்திலும், அமெரிக்கா 28-ஆவது இடத்திலும் உள்ளது. 2012 முதல் 32 நாடுகள் ஊழலை குறைத்துள்ள நிலையில், 148 நாடுகள் தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளன.
அறிக்கையின் படி, ஊழல் ஜனநாயகம், மனித உரிமை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அடிப்படை அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கான சட்ட ஒழுங்குகள், அரசுகளின் செயல்பாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
World Worst Scam Country top 10