தாமரை அரசமைக்கும் காலத்தை பார்ப்பீர்கள்!...வெறும் சத்தமல்ல சத்தியம்!...சேகர்பாபுவுக்கு தமிழிசை பதிலடி! - Seithipunal
Seithipunal


சென்னைப் போரூரில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ஏரியில் தாமரை வளர்ந்திருப்பதை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என்று பேசினார்.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அமைக்கும் பூங்காவில்.. குளத்தில் கூட தாமரை வளரக்கூடாது.. என ஆவேசப்பட்டு இருக்கிறார்  தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் சேகர் பாபு அவர்கள்... குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே...  வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரத்தான் போகிறது.. அதைக் கண்டு நீங்கள் அலறத்தான் போகிறீர்கள்.

அரசுஅமைக்கும் பூங்காவிலேயே  தாமரை வேண்டாம் என் ஆவேசப்படும் நீங்கள்.. தாமரை அரசமைக்கும் காலத்தையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.... நீங்கள் காலம் காலமாக கூவத்தை சுத்தம் செய்வோம் என மக்களை ஏமாற்றுவது மாற்றி கூவத்தையும் சுத்தப்படுத்தி அங்கேயும் தாமரை மலர மலர் முகத்துடன் மக்கள் காணத்தான் போகிறார்கள்... இது வெறும் சத்தமல்ல சத்தியம்  சாத்தியம்... இலட்சியப்ப பற்றுள்ள தொண்டர்களாலும் லட்சக்கணக்கில் சேர்ந்த புதிய உறுப்பினர்களாலும் இது சாத்தியம் என்பது சத்தியம் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

You will see the time when thmarai will be made king it is not just a word but a truth tamilisai reply to sekar babu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->