பஞ்சாயத்து ஓவர்... ஜி.கே வாசன் முடிவை ஏற்கிறேன்... இளைஞர் அணி தலைவர் யுவராஜா அறிவிப்பு..!!
Youth team leader Yuvaraja said GK Vasan decision accepted
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் கடந்த இரண்டு நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவித்ததும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். பின்னர் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் ஜி.கே வாசனை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், அதிமுக கூட்டணியின் வெற்றி மிக முக்கியம் என பேசி இருந்தார். அதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தை அடுத்த வில்லரசம்பட்டியில் ஈரோடு தமாகா தெற்கு மாவட்ட பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் விடியல் சேகர் மற்றும் இளைஞர் அணி தலைவர் யுவராஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்பொழுது பேசிய அவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே தமாகா போட்டியிட்டுள்ளது. எனவே அதிமுக கூட்டணியில் இடைத்தேர்தலிலும் தமாகாவுக்கே ஒதுக்க வேண்டும். இதனை கட்சி தலைவர் ஜி.கே வாசனிடம் வலியுறுத்தியுள்ளோம். அதன் அடிப்படையில் இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகாவுக்கு ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என பேட்டி அளித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தமாகா ஏற்றுக்கொண்டது. மக்கள் நலன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என அறிவித்தார். தலைவர் ஜி.கே வாசனின் முடிவை ஏற்பதாக இளைஞர் அணி தலைவர் யுவராஜா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில் "கூட்டணியை கருத்தில் கொண்டு தமாகா தலைவர் ஜி.கே வாசன் எடுத்த முடிவை ஏற்கிறேன். கட்சியின் எதிர்காலத்தை கருதி இந்த முடிவை ஏற்பதாக தலைவர் வாசன் கூறினார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி மற்றும் தலைவர் வாசன் உள்ளிட்டோர் கலந்து பேசி எடுத்த முடிவு என்பதால் இதை ஏற்றுக்கொள்கிறேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற பொது நோக்கத்தால் கூட்டணியில் விட்டு ஒரு பதில் தவறில்லை" என தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.
English Summary
Youth team leader Yuvaraja said GK Vasan decision accepted